மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத ஒரு மாதமாக அமைந்துவிட்டது. மாதத்தின் துவக்கத்தில் சென்னையில் பெரு மழை ஏற்பட்டு வெள்ளம் வந்தது. அதனால் அப்போது வெளியான படங்களுக்கு வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தியேட்டர்களை மூடும் சூழல் உருவானது. அதன் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அதிகமாக வரவில்லை.
இந்நிலையில் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்த படங்களும் குறிப்பிடும்படி வசூலைத் தரவில்லை. கடந்த வாரம் வெளியான படங்களில் 'பைட் கிளப்' படம் மட்டும் 5 கோடியே 75 லட்சம் வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஞாயிறன்று தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதிகளில் தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் இன்னும் படங்களைப் பார்க்கும் மனநிலைக்கு வராத நிலையில், தென் மாவட்டங்களிலும் வெள்ளத் தாக்கம் இருப்பதால் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்கும் அதே சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சலார்' உள்ளிட்ட படங்களைக் கூட வாங்கி வெளியிட யோசிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த டிசம்பர் மாதம் திரையுலகிற்கு சொல்லிக் கொள்ளும்படி அமையாது என்று திரையுலகினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.