பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்து ஹிந்தியில் வெளிவந்த 'அனிமல்' படம் 500 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் பாலிவுட்டில் ராஷ்மிகா இன்னும் பிரபலமாகி இருக்கிறார்.
இதன் காரணமாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படமான 'புஷ்பா 2' படத்திற்கு மேலும் மவுசு கூடியுள்ளது. 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்தது. இப்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் ராஷ்மிகாவும் ஹிந்தியில் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளதால் 'புஷ்பா 2' படம் இன்னும் பெரிய வசூலைக் குவிக்கும் என பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் எதிர்பார்க்கிறார்கள்.
முதல் பாகத்தை விடவும் அதிக பொருட்செலவில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். அடுத்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள உள்ளார் ராஷ்மிகா மந்தனா.