அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தண்ணீரில் தத்துளித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னும் கூட பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுநர்களுடன் இணைந்து திட்டங்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛தட் படுத்தே விட்டானய்யா மொமண்ட். மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமை இல்லையா. யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரச்சாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது'' என்று குறிப்பிட்டுள்ளார்.