சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சென்னை : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, சுதந்திர தினமான இன்று பாஜவில் இணைந்தார்.
'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி சினிமாவில் நடித்து வருவதோடு, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதில் சில சர்ச்சைகளில் சிக்கி சிறையும் சென்றார்.
இந்நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி பாஜவில் இணைந்தார். அவருடன் பிக்பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும் பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.