ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் |
எல்லா இயக்குனர்களையும் போல சினிமாவில் நடிப்பு வாய்ப்பு தேடி வந்தவர்தான் கஸ்தூரி ராஜா. ஆனால் தற்போது அவர் நடித்து வெளிவந்து 'படைத் தலைவன்' படம்தான் அவர் முதல் படம் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1985ம் ஆண்டு வெளிவந்த 'அவள் சுமங்கலிதான்' படத்தில் அவர்தான் வில்லன். படத்தில் அவர் கம்பவுண்டராக நடித்திருந்தாலும் படம் முழுக்க வரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 1992ம் ஆண்டு தான் இயக்கிய 'மவுன மழை' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் 'சமரன்' என்ற படத்தில் ராணுவ கமாண்டராக நடித்து வருகிறார். அதோடு 'ஹபீபி' என்ற படத்தில் இஸ்லாமிய குடும்பத் தலைவராக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
ஆனால் அவர் மகன்கள் இயக்கும் படத்தில் நடித்ததில்லை. தன்னை கதை நாயகனாக கொண்டு படத்தின் கதையை எழுதி வைத்துள்ளார். அந்த படத்தை விரைவில் அவர் தொடங்குவார் என்று தெரிகிறது.