பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

கன்னட நடிகர் யஷ் கே.ஜி.எப் இரண்டு பாகங்களில் நடித்த பிறகு இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகராக மாறியுள்ளார். கே.ஜி.எப் 2 படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்த நிலையில் இன்னும் அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று யஷ்-ன் 19வது படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 8ந் தேதி காலை 9.55 மணியளவில் வெளியாகும் எனவும், இப்படத்தை கே.வி.என் என்கிற நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தை தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.




