மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. தற்போது காக்க காக்க, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜீவன், ரஜினி 171- வது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக இன்னொரு செய்தியும் வைரலாகி வருகிறது. இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது போகப்போகத்தான் தெரியும்.