பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்கில் 2021ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'உப்பென்னா'. அறிமுக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
அதன் பின் இயக்குனர் புச்சி பாபு சனா, ராம் சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகி அதுவும் உறுதி செய்யப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்த பின் தான் இப்புதிய படம் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி சம்மதித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சில ஹிந்தி நடிகைகள், தெலுங்கின் முன்னணி நடிகைகள் என பரிசீலித்து கடைசியாக சாய் பல்லவி நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அணுகி கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்களாம். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படம் கிராமத்துப் பின்னணியில் விளையாட்டை மையமாகக் கொண்ட கதை என்கிறார்கள். பான் இந்தியா படமாக இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.