கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த பத்தாம் தேதி வெளியான படம் ஜப்பான். கார்த்தியின் 25வது படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இந்த படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களில் வலுவில்லை என கடுமையான விமர்சனங்கள் வருகிறது.
இந்த நிலையில் இந்த ஜப்பான் படம் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அந்த வகையில் இரண்டு நாட்களில் மொத்த வசூலாக இதுவரை 11 கோடி ரூபாய் இப்படம் வசூல் செய்திருக்கிறது.
அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாள் அதைவிட ஒரு கோடி அதிகமாகி 5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த படம் இரண்டு நாட்களில் 9 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருப்பதால் அடுத்து வரும் நாட்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.