இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழில் நாளை நமதே, நீயா போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான சந்திர மோகன்(80) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்தார் சந்திரமோகன். ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது சகோதரராக நடித்தார். தொடர்ந்து கமலின் நீயா படத்தில் இச்சாதாரியாக நடித்த ஸ்ரீபிரியாவின் காதலனாக நடித்தார். பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் குணச்சித்ர வேடத்தில் நடித்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று(நவ., 11) காலை 9:45 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை அன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.