பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
தெலுங்குத் திரையுலகத்தின் மூத்த நடிகராக சந்திரமோகன் திரையுலகத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய சந்திரமோகன் பத்திரிகையாளர்களிடம் தனது ஓய்வு முடிவு பற்றி தெரிவித்துள்ளார்.
1966ம் ஆண்டு வெளிவந்த 'ரங்குல ராட்டினா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமோகன். அதன்பின் கடந்த 55 வருடங்களாக எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளில் இதுவரையிலும் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளிவந்த 'நாளை நமதே' படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் பின்னர் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்.
கடைசியாக 2017ல் வெளிவந்த 'ஆக்சிஜன்' படத்தில் நடித்தார். நாயகன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகளுடன் நடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். இனி, வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.