நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை தயாரித்தது. அடுத்த படமாக 'கொரோனா குமார்' என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளம் பேசி, முன்பணமாக 4.5 கோடி ரூபாய் கொடுத்து, சிம்புவுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் படம் தொடங்கப்படவில்லை. மற்ற படங்களில் சிம்பு நடித்து வந்தார். இதனால் கொரோனா குமார் படத்தில் நடித்துவிட்டுத்தான் சிம்பு வேறு படங்களில் நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் முன்பணத்தை திருப்பி தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஒப்பந்தத்தில் ஒரு கோடி முன்பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்பு தரப்பில் ஒரு கோடி செலுத்திய ரசீது ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய, மூத்த வக்கீல் என்.எல்.ராஜா மத்தியஸ்தராக நியமிக்கப்படுகிறார். சிம்பு கொடுத்துள்ள 1 கோடிக்கான உத்தரவாதம் 2 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். அதற்குள் இருதரப்பும் பேசி முடிவுக்கு வரவேண்டும். 'கொரோனா குமார்' படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை ஏற்க முடியாது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று சிம்புவுக்கு தடை விதித்தால், அது அவரது தொழிலுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதாகிவிடும். மேலும், இந்த பிரச்சினையை சட்டப்படி இரு தரப்பினரும் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.