டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தனுஷ், பிரியங்கா மோகன் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ளார். தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படமான இது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது. படத்தின் பணிகள் முடிந்து தற்போது புரமோசன் பணிகள் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் படம் பற்றி அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பதாவது: கேப்டன் மில்லர் 3 பாகங்களாக உருவாகும் விதத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாக இருப்பது இரண்டாவது பாகம்தான். இந்த கதையின் முன் பின் பாகங்கள் பின்னர் தயாராகலாம். படத்திற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து மற்ற பாகங்கள் உருவாவது பற்றி தீர்மானிக்கப்படும். இந்த படத்திற்கு பிறகு நானும், தனுசும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறோம். அது கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த பாகம் அல்ல. முற்றிலும் வேறான ஒரு கதைகளத்தில் பயணிக்க இருக்கிறோம். என்கிறார் அருண் மாதேஸ்வரன்.




