துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட தமிழ் படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. அடுத்து தனுஷை வைத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க தயாரானார். படத்தின் துவக்க விழாவும் பிரமாண்டமாய் நடந்தது. ஆனால் தற்போது அந்தபடம் தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்நிலையில் முதல்முறையாக ஒரு ஹிந்தி படம் ஒன்றை இவர் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான திரைக்கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இன்றைய தலைமுறை இயக்குனர்களில் அட்லி, ராஜ்குமார் பெரியசாமி, அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பார்வை ஹிந்தி சினிமா பக்கம் திரும்பி உள்ளது. இவர்களில் அட்லி ஏற்கனவே ஷாரூக்கானை வைத்து ஜவான் எனும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார்.