டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் |
தெலுங்குத் திரையுலகத்தில் பொங்கலுக்கு வெளிவந்த மற்ற பிரம்மாண்டப் படங்களைக் காட்டிலும் குறைந்த பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 100 கோடி லாபத்தைத் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்', வெங்கடேஷ் நடித்த 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட் என்று சொல்லப்பட்ட 400 கோடி ரூபாயில் 200 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைக் கொடுத்தது எனத் தகவல்.
அதே சமயம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் சுமார் 300 கோடி வசூலை நெருங்கி 100 கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளதாம். ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
பாலகிருஷ்ணா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'டாக்கு மகராஜ்' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தாலும் இன்னும் லாபக் கணக்கை ஆரம்பிக்கவில்லையாம்.