ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா |
தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் எப்போதோவது ஒரு முறைதான் வரும். அப்படியான படங்களை துணிச்சலுடன் எடுக்கக் கூடிய இயக்குனர்கள் குறைந்துவிட்டார்கள். ஒரு காலத்தில் அரசியல் படங்களும், அதில் இடம் பெற்ற வசனங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து அப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்கள் வெளியீடு சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
அந்த வரிசையில் அடுத்து ரவி மோகன் நடித்து வரும் புதிய படத்திற்கு 'கராத்தே பாபு' என்று பெயரிட்டு டைட்டில் டீசர் ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்கள். தமிழக சட்டசபையில் நடக்கும் ஒரு விவாதமாக அந்த டீசரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இது போல மேலும் சில அரசியல் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.