பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்கள் வரும் போதும், பெரிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரம் முன்பாகவே ஒரு பெரும் இடைவெளி விழுந்துவிடும். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட படத்தை வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு இடைவெளி இப்போது வந்துள்ளது.
அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், அக்டோபர் 20ம் தேதி 'மார்கழித் திங்கள்' படமும், தெலுங்கு டப்பிங் படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் இங்கு வெளியாக உள்ளது. அந்தப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
எப்படியாவது படத்தை வெளியிட்டால் போதும் என இன்று சில தமிழ்ப் படங்களை வெளியிட்டுள்ளார்கள். “அக்கு, குண்டான்சட்டி, மயிலாஞ்சி, புது வேதம்” ஆகிய படங்கள் இன்று வெளியாகி உள்ளன. கடந்த வாரமும் அதற்கு முன்பும் வெளியான படங்களின் ஓட்டம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்கவில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லியோ' படமாகவே இருந்தாலும் அதிக பட்சம் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. மற்ற படங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. இரண்டாவது வார போஸ்டர் என்பதெல்லாம் வெற்றுப் பெருமைக்காக வெளியிடப்படுபவைதான் என்கிறார்கள்.