சின்னத்திரையில் பார்த்திபன் | பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் |
மலையாளத் திரையுலகத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளில் ஒருவர் என பாராட்டப்படுபவர் நிமிஷா சஜயன். மும்பையில் பிறந்து, படித்து வளர்ந்த நிமிஷா 2017ல் வெளிவந்த 'தொண்டிமுத்தலும் ட்ரிசாக்ஷியும்' என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும், ஒரு மராத்தி படத்திலும் நடித்த நிமிஷா இந்த வாரம் வெளியாக உள்ள 'சித்தா' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
அப்படத்தில் துப்புரவு பெண் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் நிமிஷாவின் நடிப்பைப் பார்த்தவர்கள் தமிழிலும் அவர் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தை அடுத்து 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மும்பையில் வளர்ந்ததால் தமிழைக் கொஞ்சமாகப் பேசும் நிமிஷா விரைவில் நன்றாகப் பேசக் கற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கலாம். மலையாள நடிகைகள் தமிழில் எளிதில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிடுவார்கள். அது நிமிஷாவுக்கும் நடக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.