ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நயன்தாரா தற்போது தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிக்கிறார்கள். இதுதவிர டுயூட் விக்கி இயக்கும் ‛மண்ணாங்கட்டி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் தவிர்த்து நயன்தாரா சத்தமின்றி தனது 75 வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் ஜெய் நடித்து வருகிறார். ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் அவர் நடிக்கும் படம் இதுவாகும். இவர்களுடன் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்சுத் குமார், சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.
ஜீ ஸ்டூடியோஸ், ஒய்நாட் ஸ்டூடியோஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.