சிறுபட்ஜெட் படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் ரஜினியுடன் 'காலா', அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் நடித்த பிறகு கவனிக்கப்பட்டார். டெடி, அரண்மணை 3, சிண்ட்ரல்லா, நான் கடவுள் இல்லை, பஹீரா போன்ற படங்களில் நடித்தார். தற்போது அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் 'சாரா'. இதில் அவர் டைட்டில் கேரக்டர் சாராவாக நடிக்கிறார். அவருடன் விஜய் விஷ்வா, பொன்வண்ணன், அம்பிகா, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.
படத்தின் பணிகளை இளையராஜா துவக்கி வைத்தார். பின்னர் படம் பற்றி இயக்குனர் ராஜித் கண்ணா கூறும்போது, “ஒரு இக்கட்டான சூழலில் தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா? அல்லது தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நண்பனையா? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இப்படம்.
கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார் ஆக்சன் அவதாரத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்" என்றார்.