காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும், வசூலையும் பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த தகவலை படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மிகச்சிறந்த நாள்.. எனது தந்தையுடன் டப்பிங் பணியில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.