பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அதுமட்டுமல்ல அந்த படத்தின் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ திவ்யாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அறிமுகம் இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படம் கிராமத்து பின்னணியில் நூறு சதவீத காமெடிக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி, வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி பத்து வருடங்களை தொட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சரியாக இதேநாளில் இந்த படம் வெளியானதை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் இந்த படம் பிரபல தியேட்டர் ஒன்றில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதில் ரசிகர்களுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, இயக்குனர் பொன்ராம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படம் பார்த்து ரசித்ததுடன் ரசிகர்களுடனும் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.