டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் |

தனக்கு நெருக்கமான நண்பர்கள் படம், தனக்கு மிகவும் பிடித்த படம் என்றால், படம் பார்த்துவிட்டு படக்குழுவினருடன் போனில் பேசுவார் ரஜினிகாந்த். படத்தை குறிப்பிட்டு பாராட்டுவார். மிகவும் நெருக்கமான படம் என்றால் அந்த படக்குழுவை வீட்டுக்கு அழைத்து பாராட்டுவார் அல்லது பாராட்டு பெற்ற படக்குழுவினருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து அவர்களை வீட்டுக்கு அழைத்து போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதிப்பார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படம், கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை போனில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலில் ''மை காட் எக்ஸ்சலன்ட், என்ன பெர்பார்மன்ஸ், என்ன ஆக்சன், சூப்பர் எஸ்.கே. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆக்சன் ஹீரோ ஆகிட்டீங்க. காட் பிளஸ்'' என மதராஸி படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் மனதார பாராட்டினார். அதை குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன் அந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த பாராட்டில் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை ரஜினிகாந்த் பாராட்டியது போல தெரியவில்லை. இத்தனைக்கும் ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கியவர் முருகதாஸ். அவரை ஏன் பாராட்டவில்லை. ஒருவேளை தனியாக போனில் பேசியிருப்பாரா? அதை முருகதாஸ் பப்ளிசிட்டி பண்ணலையோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.