விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த வயதில் கதாநாயகி ஆனவர் என பெயர் பெற்றவர் நடிகை மோகினி. இயக்குனர் கே.ஆரால் ஈரமான ரோஜாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் தான் நடித்த கண்மணி படத்தில் தன் விருப்பத்தை மீறி எப்படி காட்சிகள் எடுக்கப்பட்டன என்பது குறித்தும், வாரணம் ஆயிரம் படத்தில் தனக்கு நடிக்க வந்த வாய்ப்பு குறித்தும் பேசியுள்ளார் மோகினி,
பிரசாந்த்துடன் நடித்த கண்மணி படம் குறித்து அவர் கூறும்போது, “அந்த படத்தில் நீச்சல் உடை அணிந்து நடிக்க வேண்டும் என்று திடீரென சொன்னார்கள். எனக்கு அது போன்ற உடை அணிந்து பழக்கம் இல்லை. அது மட்டுமல்ல மற்றவர்கள் முன்னாடி அப்படி அணிந்து நடிக்க முடியாது என்று சொன்னேன். இதனால் அரை நாள் படப்பிடிப்பு நின்றது. அதன்பிறகு வேறு வழியின்றி அப்படி உடை அணிந்து நடித்தேன். அன்றோடு அது முடிந்து விடவில்லை. அடுத்து ஊட்டியிலும் அதேபோன்று நீச்சல் உடை காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். நான் உறுதியாக சில கொள்கைகள் வைத்திருந்தாலும், நம் கையை மீறி சில விஷயங்கள் நடக்கும் இல்லையா ? அப்படித்தான் கண்மணி படத்திலும் என் விருப்பம் இல்லாமல் நான் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் என்னைத்தான் அணுகினார்கள். ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டேன். காரணம் நான் சினிமாவில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். அதை இயக்குனர் கவுதம் மேனன் புரிந்து கொண்டார். அதன்பிறகு அந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்தார். என்னுடைய தம்பி மனைவி சூர்யாவின் ரசிகை. நான் சூர்யாவுடன் நடிக்க மறுத்ததால் அவள் கூட என் மீது கோபப்பட்டாள்” என்று கூறியுள்ளார்.