தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

மலையாள திரையுலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா மேனன். தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லது பாலிவுட்டிலும் நடித்துள்ளார். 1991ல் மலையாளத்தில் வெளியான அனஸ்வரம் என்கிற படத்தில் மம்முட்டியின் ஜோடியாக அறிமுகமானார். சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்கிற பெயரையும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனனுக்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னுரிமை தந்து அழைக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் அப்படி ஒரு அழகி போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது உலக அழகி ஐஸ்வர்யா ராயும் தானும் அழகுப் போட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்கிற புதிய ஆச்சரிய தகவலை அங்கே பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து ஸ்வேதா மேனன் கூறும்போது, “ஒரு நாள் நான் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய போது கோவையில் நடைபெறும் மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டிருந்த கடிதத்தை என் தந்தை கொடுத்தார். அது அவருக்கு தெரியாமலேயே நான் விண்ணப்பித்து இருந்தது. அவருக்கு விருப்பமில்லை என்றாலும் கூட அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உறுதுணையாக இருந்தார். அப்போது மூன்றாவது ரன்னராக வந்தேன். அதன் மூலம் கேரளாவில் கொஞ்சம் பிரபலமானேன். படங்களில் நடிக்க தொடங்கிய பின்னரும் கூட இன்னொரு பக்கம் அழகி போட்டிகளில் கலந்து கொண்டேன். அந்த சமயங்களில் ஐஸ்வர்யா ராயும் அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது சில சமயம் அவருடைய ரூம் மேட் ஆகவும் அவருடன் நான் தங்கியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.