கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்து சாதித்துவிட்டார் மணிரத்னம். முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்தது. இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனமும் பெரும்பாலும் பாராட்டியே வருகின்றன. அதேசமயம் கல்கி நாவலில் சொன்னது போன்று படத்தின் கிளைமாக்ஸ் இல்லை, மணிரத்னம் அதை மாற்றியது ஏன் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்த படத்திற்காக கடந்த 20 நாட்களாக படத்தில் நடித்த கலைஞர்கள் சோழர்கள் பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை புரொமோஷன் செய்தனர். சென்னையில் துவங்கிய இந்த பயணம் ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, மும்பை, டில்லி உள்ளிட்ட பல ஊர்களை சென்றடைந்து இறுதியாக சென்னையில் நிறைவடைந்தது. விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று படம் வெளியான போதும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், சோபிதா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர். தொடர்ந்து இன்று(ஏப்., 29) சென்னையில் உள்ள தியேட்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் படம் பார்த்தார். இவர்களுடன் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோரும் படம் பார்த்தனர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின.