மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் |
தென்னிந்தியத் திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, வட இந்தியாவில் வெளியிடப்பட்டு கடந்த சில வருடங்களாக நல்ல வசூலைக் குவித்து வருகிறது. “பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் அப்படியான வசூலைக் குவித்தது.
ஆனால், தமிழ்ப் படங்கள் அந்தப் படங்களைப் போல வசூலைக் குவிக்கவில்லை. கடந்த வருடம் வெளியான 'விக்ரம்', இந்த வருடத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாகவே ஹிந்தியில் வசூல் செய்தன.
ஓடிடி வெளியீட்டுக்கான கால அளவுதான் அதற்கு முக்கியக் காரணம். தமிழ்ப் படங்கள் தியேட்டர்களில் வெளியான நான்கு வார காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அதை வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு படம் வெளியான பின் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற வரையறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
அதற்கு சம்மதிக்கும் படங்களை மட்டுமே தங்களது தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதனால் 'விக்ரம், பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர்' ஆகிய படங்கள் வட இந்தியாவில் பிரபலமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவில்லை. எனவேதான், அங்கெல்லாம் வசூல் மிகவும் குறைந்து போனது.
தற்போது 'லியோ' படத்திற்கும் இது போன்ற சிக்கல் எழுந்துள்ளது. ஓடிடி உரிமையாக 100 கோடிக்கும் அதிகமாக பணத்தை 'லியோ' படத்திற்காக வாங்கியுள்ளார்கள். 4 வாரத்தில் ஓடிடி வெளியிடா, அல்லது 8 வாரத்தில் ஓடிடி வெளியீடா என்பதை முடிவு செய்த பிறகே 'லியோ' ஹிந்தி வெளியீடு பற்றிய விவரம் தெரிய வரும்.