ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா ஹிந்தியில் வெப் தொடர்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறர். ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இதனை வெளிப்படையாகவும் அறிவித்து உள்ளார். தற்போது அவர் மாலத்தீவில் ஓய்வெடுத்து வருகிறார். தமன்னானவும், விஜய் வர்மாவும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும நேரத்தில் அதனை மறுத்துள்ளார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணம் என்ற அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளத்தான் இருக்கிறேன். இப்போது அதற்கான மனநிலை இல்லை. நடிப்பு இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம். அதை அனுபவித்து வருகிறேன். அதனால் இப்போது திருமணம் இல்லை” என்றார்.




