4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் |

துல்கர் சல்மான் நடிக்கும் பான் இந்தியா படம் 'கிங் ஆப் கோதா'. அவருடன் ஐஸ்வர்ய லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இசை அமைக்கிறார்கள். 1980 காலகட்டத்தில் நடக்கும் கதை களத்துடன் படம் உருவாகி வருகிறது. ராஜூ என்கிற ராஜேந்திரன் கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சூதாட்ட கதை களத்தில் உருவாகும் கேங்ஸ்டர் படம். சட்டவிரோத சூதாட்டத்தில் யார் பெரிய ஆள் என்கிற மோதலை கொண்டதாக படம் உருவாகிறது. சூதாட்டத்தில் வல்லவரான துல்கரை, கேங்ஸ்டர் குரூப்கள் எப்படி பயன்படுத்துகிறது. இதுதவிர துல்கருக்கு இருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள், காதல், குடும்பம் இவற்றை மையமாக வைத்து படம் தயாராகிறது. வருகிற 24ம் தேதி வெளிவருகிறது.