‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தற்போது லியோ படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை அடுத்து மூன்று ஆண்டுகள் விஜய் நடிப்பில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறப்படும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் தற்போது விஜய் வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அதன் பிறகு காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடத்தில் ஒரு சர்வே நடத்தி உள்ளார்கள். அதில், 70 சதவீத மக்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களாம் . இந்த சர்வே முடிவு விஜய் வட்டாரத்திற்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.