'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமா எத்தனையோ விசித்திரமான படங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், இப்போது விசித்திரமான கமெண்ட்டுகளைத்தான் அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படியான கமெண்ட்டுகளுக்கு அடித்தளமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அந்த கமெண்ட்டுகள் புதிதாக வரும் படங்களைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது.
ஒரு புதிய படம் வெளிவந்ததும், படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், இடைவேளைக்குப் பின் மோசமாக இருக்கிறது, மொக்கையாக இருக்கிறது. ஆனால், இடைவேளைக்கு முன் கலகலப்பாக நன்றாக இருக்கிறது என 'பின், முன்' என பிரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக படம் நன்றாக இருக்கிறது என்ற கமெண்ட்டுகளை அபூர்வமாகத்தான் கேட்க முடிகிறது.
நேற்று வெளியான 'மாவீரன்' படம் பற்றி வரும் விமர்சனங்களும், ரசிகர்கள் கருத்துக்களும் இதையேதான் எதிரொலிக்கின்றன. இடைவேளை வரை சுவாரசியமாக இருக்கிறது, இடைவேளைக்குப் பின் சரியாக இல்லை, படம் எப்போது முடியும் என யோசிக்க வைக்கிறது என்ற கமெண்ட்டுகள்தான் அதிகம் வருகின்றன.
ஆனால், மூத்த இயக்குனர்களைக் கேட்டால் இடைவேளை வரை ரசிகர்களை அப்படி, இப்படி என ஏதாவது செய்து உட்கார வைத்துவிட்டு, இடைவேளைக்குப் பின் அழுத்தமான கதையைச் சொன்னால் போதும், அந்தப் படம் ஹிட் என்கிறார்கள். இருந்தாலும் இன்றைய இளம் இயக்குனர்கள், இடைவேளைக்குள் ஏதாவது செய்துவிட்டு, இடைவேளைக்குப் பின் திணற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கமெண்ட் கருத்து சொல்கிறார்கள்.