லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் காவாலா என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்த இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதினார். இந்த பாடலுக்கு மிக சிறப்பாக நடனமாடி இருந்தார் தமன்னா. பாடல் வெளியானதை அடுத்து, நடிகர், நடிகையர் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் அதேப்போன்று நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தபாடலை பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பாடலை தமன்னாவின் காதலரான நடிகர் விஜய் வர்மாவும் பார்த்து ரசித்து விட்டு தனது இன்ஸ்டாவில் ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில், இந்தப் பாடல் நெருப்பாக உள்ளது. சினிமாவின் கடவுள் மற்றும் பெண் கடவுள் என்று தமன்னாவின் நடனத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். இந்தப் பாடலில் தமன்னாவின் நடனத்தை ஏராளமானோர் பாராட்டிய போதும், அவரது காதலர் பாராட்டியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.