லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கிரிக்கெட் வீரர் தோனி, தனது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‛எல்ஜிஎம்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் தனது மனைவி சாக்க்ஷியுடன் கலந்து கொண்டார் தோனி. இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு தொகுப்பாளினி, நடிகர் யோகி பாபு நன்றாக கிரிக்கெட் விளையாடுவார். அவரை சிஎஸ்கே அணியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று தோனியை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். இதற்குப் பின்னர் மேடையில் பேசிய போது ஒரு பதில் கொடுத்தார் தோனி.
அவர் கூறுகையில், நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் ஆர்வம் உள்ளது என்பது எனக்கு தெரியும். அவரை சிஎஸ்கே அணியில் இணைப்பதற்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. யோகிபாபு மேட்ச் விளையாடும் நேரத்தில் சரியாக கால்சீட் கொடுக்க வேண்டும். பிராக்டீஸ் செய்வதற்கு சரியாக வர வேண்டும். அதற்கு சம்மதம் என்றால் நிர்வாகத்திடம் பேசுகிறேன் என்று சொன்ன தோனி, இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கிரிக்கெட் மைதானத்தில் பவுலர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்தை போட மாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கி தான் வீசுவார்கள். அதை யோகிபாபுவால் சமாளிக்க முடியுமா? என்று அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் சிரித்துக் கொண்டே சொன்னார்.