ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி, தெலுங்கிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இதற்கு முன்பு 'நாடோடி' படத்தின் ரீமேக்கான 'சம்போ சிவ சம்போ', 'நிமிர்ந்து நில்' படத்தின் ரீமேக்கான 'ஜண்ட பை கபிராஜு' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது 'ப்ரோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் சமுத்திரக்கனி இயக்கம் நடிப்பில் 2021ல் ஓடிடி தளத்தில் வெளியான 'விநோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக்.
தமிழில் சமுத்திரக்கனி நடித்த கடவுள் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க, தம்பி ராமையா கதாபாத்திரத்தை சிறிது மாற்றி அதில் சாய் தரம் தேஜ் நடிக்க, கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானது. குறுகிய கால தயாரிப்பாக விறுவிறுப்பாக நடந்து முடிந்த இப்படம் ஜுலை மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று மாலை வெளியான டீசருக்கு அதற்குள்ளாக 1.15 கோடி பார்வைகள் கிடைத்துள்ளது. டீசருக்கு தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.