பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழும் சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகளை திரைப்பட நட்சத்திரங்கள் தத்தெடுத்துள்ளனர். கார்த்தி, விஜய்சேதுபதி ஆகியோர் சமீபத்தில் புலி மற்றும் சிங்கத்தை தத்தெத்தார்கள். சிவார்த்திகேயன் அனு என்ற வெள்ளை புலியையும், விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும ஏற்கெனவே தத்தெடுத்தார். தற்போது 3 வயது ஷேரு என்ற ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.
இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் “வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 ஜிக்கான ரசீது மற்றும் பூங்காவை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




