பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார் சூரி. முதல்பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்தபாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. தற்போது கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றார் சூரி. அப்போது தனது ரசிகர் ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தவர் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்து இருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் தனது வீட்டுக்கு வந்துள்ளார் சூரி. ‛‛என்னுடைய ரசிகரின் அம்மா எனது அம்மா மாதிரி. அதனால்தான் நேரில் உடல் நலம் விசாரிக்க வந்தேன்'' என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் சூரி. அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.