பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
கோடை விடுமுறை இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இருந்தாலும் வாராவாரம் புதிய படங்கள் வெளிவருவது மட்டும் முடிவுக்கு வருவதில்லை. வழக்கம் போல இந்த வாரமும் ஒரு சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இட்னானி, பிரபு, பாக்யராஜ், நரேன் மற்றும் பலர் நடித்துள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படமும், எஆர்கே சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா, ஆதிரா ராஜ், வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள 'வீரன்' படமும், ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், ஜெகன், ஈடன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ள 'துரிதம்' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்திற்கும், 'வீரன்' படத்திற்கும் இடையில்தான் முக்கிய போட்டி இருக்கும். முத்தையா வழக்கம் போல சாதியை மையமாக வைத்து 'காதர்பாட்சா' படத்தை எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. படம் வந்த பிறகுதான் அந்த சந்தேகம் தீரும். 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய எஆர்கே சரவணன் இயக்கியுள்ள படம்தான் 'வீரன்'. சூப்பர் ஹீரோ கதையை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார். இரண்டு படங்களின் போட்டியில் எந்தப் படம் வெற்றி பெறப் போகிறது என்பது ஜுன் 2ல் தெரியும்.