சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் படம் போலீஸ் பேமிலி. சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை பாலு இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'பகை மிரள' என்ற படத்தை இயக்கியவர்.
'போலீஸ் பேமிலி' படத்தின் முதல் பார்வையை இயக்குனர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
கதை குறித்து படக்குழு கூறுகையில், ‛‛சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து இருக்கும் படம் இது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எப்படி பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு வரக்கூடிய சில எதிர்ப்புகள் பிரச்னைகளால் அவர்களுடைய குடும்பம் எப்படி தொந்தரவுக்கு ஆளாகிறது, அதை எப்படி அவர்கள் சாதுரியமாக கையாண்டு, மீண்டு வருகிறார்கள், அதில் என்ன இழப்பைச் சந்திக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இந்த 'போலீஸ் பேமிலி' என்கிற டைட்டில் அதுவாகவே கதையைத் தேடி வந்துவிட்டது.. படம் பார்க்கும்போது கதையில் அதற்கான நியாயம் இருப்பதை உணர முடியும் '' என்கிறார்கள்.