பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? |
அபியும் நானும், மொழி, பயணம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். நடிகர் எஸ். ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய பொம்மை திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வகையில் இப்போது இயக்குனர் ராதா மோகன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார். இதை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.