இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகராக தற்போது அடியே , டியர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கோவையில் அவர் நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதன்படி, "ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். அந்த படம் நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். செல்வராகவனின் அடுத்த பாகத்தின் கதையை கேட்க நான் மிக ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த ‛ஆயிரத்தில் ஒருவன்' படம் 2010ல் வெளியானது. அப்போது பெரியளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தை இப்போது பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த இசை பெரியளவில் பேசப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக உள்ளதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.