கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து ஒரு பக்கம் நடிகர் பிரபாஸுக்கும், அனுஷ்காவிற்கும் இடையே காதல் என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் ஒரு செய்தி கிளம்பி தற்போது வரை அது சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா இன்னும் மளமளவென நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முற்றிலும் மாறாக வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார். அவையும் பெரிய அளவில் பேசப்படவில்லை
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நவீன் பாலிஷெட்டியுடன் அனுஷ்கா ஜோடியாக இணைந்து நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. புதியவரான மகேஷ்பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்த்து விட்டு நடிகர் பிரபாஸ் தனது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிலளித்த அனுஷ்கா, தேங்க்யூ பப்ஸ் என்று பிரபாஸை தான் அவரை செல்லமாக அழைக்கும் பெயருடன் குறிப்பிட்டு நன்றி சொல்லி இருக்கிறார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு அனுஷ்கா இப்படி பிரபாஸை உரிமையுடன் செல்லமாக அழைத்ததை தொடர்ந்து, அவர்களுக்குள் இன்னும் காதல் இருக்கிறது என்ற டாபிக் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. அதேசமயம் பிரபாஸ் போன்ற கம்பீரமான நடிகருக்கு பப்ஸ் என்கிற பெயர் தான் கிடைத்ததா என்று பிரபாஸின் ரசிகர்கள் தங்களது மனக்குறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.