சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் படத்தின் 2வது ஹீரோ குணா பாபு, பாரிவள்ளல் உள்ளிட்ட பலர் நடிக்க, அறிவழகன் முருகேசன் இயக்கி உள்ள படம் தடை அதை உடை. படம் குறித்து இயக்குனர் பேசுகையில், ‛‛1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம். அக்டோபர் 31ல் ரிலீஸ்.
என் அப்பா படப்பிடிப்பை பார்த்து விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார். வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை போட்டு படம் எடுத்ததற்காக ஊரே திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். சினிமாவை வாழ விடுங்கள். சினிமா நல்ல பிஸினஸ். ஒரு மாதம் யாரும் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காமல் இருந்தால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள்'' என்றார்.




