'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை குறித்து இயக்குனர் ஹரி பேட்டி அளித்துள்ளார். அதன்படி, "விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். அதனால் எனக்கு நிறைய பொறுப்பு உள்ளது. குறிப்பாக விஷால் இந்த படத்தில் போலீஸாக நடிக்கவில்லை. எப்போதும் என் படங்களில் வருவது போல அதிரடியான சண்டை காட்சிகள் இந்த படத்திலும் உள்ளது. இந்த படத்தில் பேசப்படும் கன்டென்ட் தனித்துவமானது. அதேபோல் இப்படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி,ரேணிகுண்டா,காரைக்குடி,வேலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் " என கூறியுள்ளார்.