'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் 50 வருடம் என்கிற மாபெரும் இலக்கை தொட்டிருக்கிறார். அதிலும் இப்போது வரை தனித்து ஹீரோவாக நடித்தே இந்த சாதனையை செய்திருப்பவர் ரஜினி ஒருவர்தான். இத்தனை வருடங்கள் இவர் திரையுலகில் பயணித்ததால் மற்ற எந்த நட்சத்திரங்களும் செய்ய முடியாத பல புதுமையான விஷயங்களையும் சாதனைகளையும் கூட செய்திருக்கிறார். அதில் ஒன்றுதான் அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்களும் கூட அவருடன் பின்னாளில் ஜோடியாக, சகோதரியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
அந்த வகையில் கடந்த 1980ல் பொல்லாதவன் என்கிற படத்தில் ரஜினியும் நடிகை லட்சுமியும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு 13 வருடங்கள் கழித்து 1993ல் வெளியான எஜமான் படத்தில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா, ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல நெற்றிக்கண் படத்தின் ஜோடியாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் அவரது தங்கையாக நடித்தார்.
ரஜினிக்கு அடுத்ததாக நடிகர் மோகன்லால் அவரது முதல் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். அவரது மகளான சரண்யா பாக்யராஜ் கிட்டத்தட்ட 26 வருடம் கழித்து 2006ல் மலையாளத்தில் வெளியான போட்டோகிராபர் என்கிற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் கமல் நடிப்பில் விரைவில் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். கல்யாணியின் அம்மா தான் நடிகை லிஸி லட்சுமி. இவர் இதற்கு முன்னதாக 1985ல் ஹிந்தியில் வெளியான சாகர், 1986ல் தமிழில் வெளியான விக்ரம் ஆகிய படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது அவரது மகள் கிட்டத்தட்ட 40 வருடம் கழித்து கமல்ஹாசனின் படத்தில் இணைந்துள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்..