மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தெலுங்கில் உருவாகி பான் இந்திய படமாக கடந்த ஜூன் 27ம் தேதி கண்ணப்பா திரைப்படம் வெளியானது. விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த இந்த படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியிருந்தார். இதில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். புராண பின்னணியில் உருவாகி இருந்த இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. ஹிந்தியிலும் கூட இந்த படத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜனாதிபதி மாளிகையில் சிறப்புக் காட்சியாக ராஷ்டிரபதி பவனில் திரையிடப்பட்டது. தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தனர். “இதன் தெய்வீகத் தன்மையான கதை சொல்லலுக்கும் கலாச்சார பிரதிபலிப்புக்குமான மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது” என்று தயாரிப்பு நிறுவனம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.