'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கிங் காங். அதிசய பிறவி படத்தில் ரஜினியின் முன்னால் இவர் ஆடும் நடனம் இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பின்னர் வடிவேலு படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பெயர் பெற்றார்.. சமீபத்தில் இவரது மகள் திருமணம் நடைபெற்றது.. இதற்காக திரையுலகை சேர்ந்த விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அவர் நேரிலேயே சென்று அழைப்பிதழ் வைத்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகின. அவர் பத்திரிகை அழைப்பு கொடுத்த பிரபல நடிகர்கள் பெரும்பாலும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
அதேசமயம் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தது பேசு பொருளானது. அதன் பிறகு இது குறித்து கிங்காங் கூறும் போது, “அன்பின் நிமித்தமாகவும் மரியாதை நிமித்தமாகவும் அனைவருக்கும் சென்று அழைப்பிதழ் வைத்தேன். ஒவ்வொருவருக்கும் அந்த தேதியில் வெவ்வேறு வேலைகள் நிச்சயம் இருந்திருக்கலாம். அதனால் அவர்களால் வர முடியாமல் போய் இருக்கலாம். நடிகர்கள் பாக்யராஜ், தேவயானி போன்ற பலர் திருமண மண்டபம் வரை வந்து கூட்டம் காரணமாக உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்ற செய்தியும் எனக்கு வந்தது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு நேரில் சென்று மணமக்களை சந்தித்து வாழ்த்தி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கிங்காங்கின் மகள் தீவிரமான சிவகார்த்திகேயன் ரசிகை. தனது அபிமான நடிகர் திருமணத்திற்கு வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததாகவும் ஆனால் தனி ஒருவராக தன் வீட்டிற்கே தேடி வந்து அவர் வாழ்த்தியது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றும் அவரது மகள் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.