Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் - எச்.வினோத் கூட்டணி இணையும் படம் நவம்பரில் துவக்கம்?

23 ஏப், 2023 - 02:02 IST
எழுத்தின் அளவு:
Kamal---H.-Vinoth's-film-to-start-in-November?

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தனக்கென முத்திரையை பதித்தவர் இயக்குனர் எச்.வினோத். அதன்பின் கார்த்தி நடிப்பில் ‛தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக 3 படங்களை இயக்கினார்.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே கமல்ஹாசனிடமும் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் எச்.வினோத். கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சி மே மாதம் நடக்கிறது. அதோடு 'இந்தியன் 2' படத்தின் ஷுட்டிங் முடிகிறது.

இதனை முடித்ததும் எச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்க் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்!மார்க் ஆண்டனி படத்தின் புதிய ... பொன்னியின் செல்வன் 2ம் பாகம்: கமல் குரலில் வெளியான அறிமுக வீடியோ பொன்னியின் செல்வன் 2ம் பாகம்: கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)