லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் டிரைலர் எதிர்பார்த்ததை விடவும் பிரம்மாண்டமாக அமைந்தது. இரண்டாம் பாகத்தில்தான் கதை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரு பக்கம் அருண்மொழி வர்மன் இறந்ததாக வந்த செய்தியுடனும், மந்தாகினி யார் என்ற சஸ்பென்ஸுடனும் முதல் பாகம் முடிவடைந்தது.
இரண்டாம் பாகத்தில் சோழ தேசத்தில் நடக்கும் அரசியல் ஆட்டம், நந்தினியின் பழி வாங்கும் படலம், தங்களது நாட்டைக் காப்பாற்ற ஆதித்த கரிகாலன், அருண் மொழி வர்மன், குந்தவை ஆகியோர் போராடுவது என இரண்டாம் பாகம் நகரும்.
இந்தப் படத்தின் முதல் பாகக் கதையின் அறிமுக உரையை, கமல்ஹாசன் வாய்ஸ் ஓவரில் கூறியிருந்தார். இரண்டாவது பாகத்திலும் கமல்ஹாசன் கதை சுருக்கத்தை விளக்கி இருக்கும் அறிமுக வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டாம் பாகம் குறித்த தகவல்களுடன் கூடிய இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.