ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அங்கிருந்து இடம் பெயர்ந்து தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு உள்ளார்கள். அங்குள்ள ஜோகன்ஸ்பர்க்கில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு ரயிலில் நடக்கும் அதிரடியான சண்டை காட்சி ஒன்று படமாகிறது. 12 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்திவிட்டு அதன் பிறகு படக்குழு சென்னை திரும்புகிறது.
தென்னாப்பிரிக்காவில் ஓட்டல் அறையில் கமல்ஹாசன் ஓய்வெடுப்பது, உயர் ரக கேமரா ஒன்றை அவர் தனது தோளில் சுமந்தபடி நடப்பது, விமானத்தில் பைலட் அருகே அமர்ந்து அவரும் விமானம் இயக்குவது, பீங்கான் பாத்திரம் போன்று இருக்கும் பொருளில் கையில் தாளம் போடுவது என கமல் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.