விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! |
காமெடி நடிகரான சூரியை தனது விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன். அந்தப் படம் சூரிக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனால் தற்போது அவரை அடுத்தடுத்து பல இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களில் நடிப்பவர், அதையடுத்து விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் சூரி. இது தவிர மற்றொரு படத்தில் அவர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சூரியை தேடி மேலும் சில இயக்குனர்களும் கதை சொல்லி வருகிறார்கள். அதனால் தற்போது பிஸியான ஹீரோவாகி விட்டார் சூரி.